புனித நகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நெஞ்சு வலியால் சிகிச்சை பலனின்றி
பருத்தித்துறை கற்கோவளம் புனித நகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நெஞ்சு வலியால் சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமைஉயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை கற்கோவளம் புனித நகர் பகுதியைச் சேர்ந்த திருமதி பத்மாவதி ரவிச்சந்திரன் (வயது 50) என்பவரே உயிரிழந்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை நெஞ்சுவலி, வயறுநோவினால் நடக்க முடியாத நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். குறித்த பெண் சிறுநீரக பிரச்சனையும் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
பருத்தித்துறை பிரதேச மரண விசாரண அதிகாரி சதானந்தம் சிவராசா மரண விசாரணையை மேற்கொண்டார்.