Tue. Sep 8th, 2026

புத்தூர் வளர்மதி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்து ஹெற்றிக் சாதனை படைத்துள்ளனர்

கரவெட்டி வளர்மதி விளையாட்டு கழகத்தால் நடாத்தப்பட்ட கரப்பந்தாட்ட போட்டியில் புத்தூர் வளர்மதி அணி தொடர்ச்சியாக 3 தடவைகள் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்து ஹெற்றிக் சாதனை படைத்துள்ளனர்.
கரவெட்டி வளர்மதி
சித்திரை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கத்தின் அனுமதியுடன் கரவெட்டி வளர்மதி விளையாட்டுக் கழகம் நடாத்திய கரப்பந்தாட்ட போட்டியின் இறுதியாட்டம் நேற்று  வெள்ளிக்கிழமை குறித்த கழக மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்றது.
இதன் இறுதியாட்டத்தில் புத்தூர் வளர்மதி அணியை எதிர்த்து கெருடாவில் ஐக்கியம் அணி மோதியது.
ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய புத்தூர் வளர்மதி அணி 3:0 என்ற செற் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
இதன் ஆட்ட நாயகனாக புத்தூர் வளர்மதி அணியை பிரதிநிதித்துவம் செய்த
சஞ்சிகன் தெரிவுசெய்யப்பட்டார்.
கரவெட்டி வளர்மதி விளையாட்டு கழகத்தால் நடாத்தப்பட்ட கரப்பந்தாட்ட போட்டியில் புத்தூர் வளர்மதி அணி தொடர்ச்சியாக மூன்று தடவைகள் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்து ஹெற்றிக் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed