புத்தூரில் இளம் குடும்பஸ்தர் குருதி புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்

அண்மையில் திருமணம் செய்து சில தினங்களில் குழந்தை கிடைக்கவுள்ள நிலையில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
யாழ் புத்தூர் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்த்தர் குருதி புற்றுநோய் காரணமாக இன்று காலை கொழுப்பு வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கொழுப்பில் குடும்பத்துடன் வசித்து வந்த குறித்த குடும்பஸ்தர் அண்மையில் திருமணம் செய்து மனைவியுடன் வசித்து வந்துள்ளார் .
சிலகாலமாக இரத்தப்புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டு கொழும்பு வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .
சம்பவத்தில் பாஸ்கரசர்மா அஜந்தன் வயது 29 என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் .
இன்னும் சில தினங்களில் குழந்தை பிறக்கவுள்ள நிலையில் இவ் துரச்சம்பவம் இடம் பெற்றுள்ளது இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது