Thu. Oct 8th, 2026

புதுக்குடியிருப்பில் விசேட அதிரடிப்படை தேடுதல்.

புதுக்குடியிருப்பு பகுதியில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து பொலி ஸ் விசேட அதிரடிப்படையினா் நடாத்திய சுற்றிவளைப்பு நிறைவுக்கு வந்துள்ளது.

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள பழைய இரும்பு விற்பனை நிலையத்திற்குள் ஆயுதங்கள் இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்குவிரைந்த பாதுகாப்பு பிரிவினர்

தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேடுதலை செய்வதற்காக பாதுகாப்பு பிரிவினரால் இன்று புதன்கிழமை நீதிமன்றில் விசேட அனுமதி பெறப்பட்டிருக்கின்றது.

இதற்கமைய இன்று முற்பகல் 10 மணி முதல் இந்த தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று சற்று நேரத்திற்கு முன்னர் முடிவுக்கு வந்துள்ளது.

எனினும் நாளை வியாழக்கிழமை மீண்டும் அங்கு தேடுதல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

About The Author

Share This:

Leave a Reply

You may have missed