புதிய அவதாரம் எடுக்கப்போகும் மைத்திரி

சுதந்திர கட்சியின் 68 ஆவது ஆண்டு நிகழ்வில் பேசிய ஜனாதிபதி, மத்திய வங்கி ஓலுடன் சம்பந்தப்படடவர்கள் எந்தவித பிரச்சினையும் இரணி நாட்டில் உலாவருவதாகவும் , இவர்கள் மீது தன கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் சூளுரைத்திருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய கடைசியில் பிரதித்தலைவரும் அமைச்சருமான ரவி கருணாநாயக்க ஆகியோரையே ஜனாதிபதி குறிப்பிட்டு பேசியதாகவும், இதனால் ஐக்கிய தேசிய கட்சியின் கிளர்ச்சிக்குழு உறுப்பினர்களின் சாட் சியத்துடன் இவர்கள் இருவர் மீதும் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க ஆலோசித்துவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரும் கைது செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் இருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே கோத்தபாய ராஜபக்ச சம்பந்தமான வழக்குகளும் துரிதகதியில் விசாரணைக்கு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் தற்பொழுது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா , சுதந்திர கட்சியுடன் நெருக்கமாகியுள்ளதும், 68 ஆம் ஆண்டு நிகழ்வில் பங்குபற்றி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.