Fri. Jan 17th, 2025

புங்குடுதீவு வலைப்பந்தாட்ட தொடர் சன்னிஸ்ரார் அணி இறுதியாட்டத்திற்குத் தகுதி

புங்குடுதீவு இறுப்பிட்டி சன சமூக நிலையம் தமது பவள விழாவை முன்னிட்டு நடாத்தும் வலைப்பந்தாட்ட போட்டியில் புங்குடுதீவு சன்னிஸ்ரார் அணி இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.

புங்குடுதீவு இறுப்பிட்டி சன சமூக நிலையம் தமது பவள விழாவை முன்னிட்டு நடாத்தும் வலைப்பந்தாட்ட போட்டியின் அரையிறுதி ஆட்டம் இன்று புங்குடுதீவு பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்றது.
அரையிறுதி ஆட்டத்தில் சன்னிஸ்ரார் அணியை எதிர்த்து நண்பர்கள் அணி மோதியது. ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய சன்னிஸ்ரார் அணி 18:4 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்