புங்குடுதீவு பற்றைக்குள் மர்ம பொருள்!! -திறந்த பொலிஸாருக்கு கிடைத்த 16 கிலோ கஞ்சா-
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு குறிச்சிக்காடு இரட்டை சந்திப் பகுதியில் உள்ள பற்றைக் காட்டிற்குள் இருந்து 16 கிலோ கேரள கஞ்சா இன்று காலை யாழ்.மாவட்ட போதைத்தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
புகுடுதீவு குறிச்சிக்காடு பகுதியில் இனம் தெரியாதா நபர்களினால் மர்மப் பொதிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தீவக கடற்படையினரின் புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தேடுதல் நடத்தியதில் பற்றைக் கட்டுக்குள் மறைக்கப்பட்ட மர்மப் பொதிகள் மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட பொதிகளை சோதனையிட்ட போது அவற்றுக்குள் கஞ்சா போதைப் பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் வளனப்பட்டது.சம்பவ இடத்துக்கு வருகை தந்த அவர்கள் கஞ்சாவினை மீட்டுள்ளனர்.இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.