Sat. Jan 18th, 2025

பிரித்தானிய நாணயத்தில் பாரிய வீழ்ச்சி- அரசியல் நிச்சயமின்மை தொடர்வதால்

பிரித்தானியா ஐரோப்பாவில் இருந்து வெளியேறுவது மீதான அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் பிரித்தானிய பௌண்ட்ஸ் நாணய சந்தைகளில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.
மேலும் மூன்று மாத ப்ரெக்ஸிட் கால நீட்டிப்புக்காக முயற்சிகளை எம்.பி மேற்கொண்டுவருகையில், இனொரு பொதுத்தேர்தலுக்குமான சாத்தியப்பாடுகள் காணப்படுவதால் பிரித்தானிய நாணயம் அமெரிக்கா டாலர் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய யூரோக்கும் எத்ரிராக் பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளது .
டாலருக்கு எதிராக, இது ஒரு சென்ட் மேலாக குறைந்து 1.2050 டாலராக குறைவடைந்தது , அதே நேரத்தில் யூரோவிற்கு எதிராக இது 1.10 யூரோ ஐ விடக் குறைந்தது.இது 8 % சதவிகிதத்திற்கு மேலான வீழ்ச்சியாகும்.
எந்தவித ஒப்பந்தமும் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற இங்கிலாந்து தயாராக இருப்பதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் பலமுறை வலியுறுத்தியுள்ளார். இந்த நிச்சயமற்ற நிலை தொடருமானால் பௌண்ட்ஸ் இன் பெறுமதி 1 யூரோ வரை செல்லக்கூடும் என்று நாணய வல்லுநர்கள் கணிப்பு தெரிவிக்கின்றனர்
ப்ரெக்ஸிட் க்கான காலஎல்லை அக்டோபர் 31 என்று நிச்சயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்