பிரபல நடிகை மஞ்சு வாரியர் நிலச் சரிவில் மாட்டினாரா? படக்குழு தேடுதல்
பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் படப்பிடிப்பின் போது காணமல் போயுள்ளார். இவர் மண்சரிவில் மாட்டிக்கொண்டாரா என்ற அச்சத்தில் படக்குழுவினர் தேடுதல் வேட்டை நடத்துகின்றனர்.
சணல்குமார் சசிதரன் இயக்கத்தில் “கயாட்டம்” எனும் படப்பிடிப்பு இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்று வருகின்றது.
தற்போது அந்த பகுதியில் கடும் மழை பெய்து கொண்டிருப்பதனால் அப்பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுள்ளதுடன், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் தொலைத் தொடர்பு வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியர் காணாமல் போயுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த படக் குழு தற்போது தேடுதல் வேட்டை நடத்துகின்றனர்.