Thu. May 21st, 2026

பிரதேச சபைகளில் ஊழல் இருந்தால் அவற்றை சரியான முறையில் நிரூபியுங்கள்-வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளர்

எமது பிரதேச சபையின் அபிவிருத்தி திடங்களில் ஊழல் இருப்பதாக விஷமத்தனமாக சமூகஊடகங்களில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அரசியல் வாதிகள் பொய் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள் என்று வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.. திரும்ப தீரும்ப பொய்யை எழுதுவதன் மூலம் அது உண்மையாகும் என்று இவர்கள் கருதுகிறார்கள். உண்மையான ஊழல்கள் தொடர்பான தகவல்கள் இருந்தால் அதனை சரியான முறையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்துவதன் மூலமோ அல்லது புலனாய்வு பிரிவினரிடம் தெரியப்படுத்துவதன் மூலமோ அதனை நிரூபியுங்கள். ஊழல்களை அறியப்படுத்துவதற்கு இலங்கையில் சரியான முறைகள் இருந்தபோது இவர்கள் சமூக ஊடங்கங்களில் பொய்யாக எழுதுவதிலேயே அக்கறை செலுத்துகிறார்கள். உண்மையான ஊழல்கள் இருப்பின் அதனை உரிய அதிகாரிகளுக்கு தெய்யப்படுத்துவதன் மூலம் நிரூபித்து காட்டுமாறு அவர் சவால் விடுத்தார்

About The Author

Share This:

Leave a Reply

You may have missed