பிரதி அதிபர் தெரிவிற்கான சுற்றுநிரூபம்

அரச பாடசாலைகளில் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்களை நியமிக்கப்படும்போது பின்பற்றவேண்டிய விடயங்களைப் பற்றி சுற்றறிக்கை 2000/04யில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி பிரதி அதிபர், உதவி அதிபர்களை நியமிக்கும்போது பின்பற்ற வேண்டிய சில விடயங்கள் (அதாவது அதிபர் சேவையைச் சேர்ந்தவர்கள் இல்லாதபோது பின்பற்றவேண்டியது)
1. ஆசிரியர் சேவைத்தரத்தின் அடிப்படையில் முதலில் பாடசாலையில் உள்ள ஆசிரியர்களை ஒழுங்குபடுத்தி பட்டியல் தயாரித்துக்கொள்ளவேண்டும்.
2. பட்டியலின் அடிப்படையில் தரம் 1 ஆசிரியர்களுக்கு கட்டயாம் முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.
3. தரம் 1 ஆசிரியர்கள் இல்லாதபோது தரம் 2-1 ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.
4. ஆசிரியர் தரத்தில் குறிப்பிட்ட பதவிகளுக்கு பலபேர் தகுதி பெறுவார்களாயின் அவர்களில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா, கல்விமானி, கல்வி முதுமானி போன்ற பட்டங்களில் உயர்ந்த பட்டங்களை பெற்றிருப்பவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.