பிரதமர் முன்னால் தமிழின அடையாள அழிப்பை துணிகரமாக பேசிய சுமந்திரன்.
யாழ்.பொது நூலகத்தை ஐக்கியதேசிய கட்சி எரித்தது , யாழ்.மாநகரசபை கட்டிடத்தை இராணுவம் இடித்தது என பிரதமர் ரணில் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார் .
யாழ்.மாநகரசபை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பிரதமா் ரணில் விக்கிரமசிங்க தலமையில் இன்று இடம்பெற்றிருந்தது.
இதன்போது உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினா் சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,
யாழ்ப்பாணத்தின் அடையாளமாக திகழ்ந்த இரு கட்டி டங்கள் இடித்து அழிக்கப்பட்டது. முதலாவது கட்டிடம் யாழ்.பொதுநுாலகம். அதனை ஐக்கியதே சிய கட்சி அழித்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
அப்போது ஐக்கியதேசிய கட்சியின் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராக இருந்தாா். அப்போதே ஒரு இரவில் நுாலகம் அழிக்கப்பட்டது.
அதேபோல் யாழ்.மாநகரசபை கட்டிடம் கோட்டையிலிருந்து இராணுவம் தொடார்ச்சியாக இந்த பகுதிக்கு ஷெல் தாக்குதலை நடாத்தி அழித்தது என பிரதமர் முன்னிலையில் சுமந்திரன் பகிரங்கமாக நினைவு கூர்ந்துள்ளார் .