Sat. Jan 18th, 2025

பிரதமா் செயலகத்திலிருந்து வந்த உத்தரவு. விழுந்தடிக்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை.

யாழ்ப்பாணம்- மானிப்பாய்- காரைநகா் இடையிலான வீதியை உடனடியாக புனரமைப்பு செய்யுமாறு பிரதமா் செயலகம் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் பிரதமமந்திரி ரணில்விக்கிரமசிங்க யாழ்.செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி கூட்டத்தின் போது காரைநகர் பிரதேசசபை தவிசாளரினால் யாழ்

மானிப்பாய் காரைநகர் வீதி அபிவிருத்தி, காரைநகர் பிரதேச சுற்றுவட்ட வீதி அபிவிருத்தியை வீதி அபிவிருத்தி அதிகார சபையூடாக 2019இல் ஆரம்பித்து மக்களின் இலகுவான போக்குவரத்துக்கு உதவுமாறு கோரியிருந்தார்.

இதன் பிரகாரம் பிரதமர் அலுவலகத்தின் செயலாளர் யாழ் மானிப்பாய்
காரைநகர் வீதி மற்றும் காரைநகர் பிரதேச சுற்றுவட்ட வீதியை

உடன் மீளப்புனரமைப்பதற்கு ஏற்ற ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு  வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவருக்கு கடிதம் மூலம் பணிந்துள்ளார்.

மேற்படி கடிதத்தின் பிரதிகள் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், காரைநகர் பிரதேசசபை தவி சாளர் வீ.கேதீஸ்வரதாஸ் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்