Sun. Sep 8th, 2024

பிரதமர் இன்று கைத்தொழில் கண்காட்சியை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கிறார்

தொழில்முனைவோரை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு நிதி அமைச்சினால் ஒழுங்குசெய்யப்பட்ட இலங்கை கைத்தொழில் கண்காட்சி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அவர்களால் இன்று (07) யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது

இந்த கண்காட்சி செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தின் முற்றவெளியில் தினமும் காலை 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பொதுமக்களுக்காக திறந்திருக்கும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

100,000 புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கும் நோக்கத்துடன் நிதியமைச்சர் மங்கள சமரவீர வரவு செலவு திட்டத்தில் முன்வைத்த திட்டத்தின் கீழ் நிதி அமைச்சு ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சிக்கு, இலங்கை வங்கி , மக்கள் வங்கி, தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை எனபன அனுசரணை வழங்குகின்றன. இது யாழ்ப்பாணம் கோட்டையின் முன்பாக உள்ள முற்றவெளியில் இடம்பெறவுள்ளது

விவசாயம் , மீன்வளம் மற்றும் சுற்றுலாத் துறைகள் போன்ற யாழ்ப்பாண மாவட்டத்தை அடிப்படையாக கொண்ட தொழில்களை அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கும் புதிய தொழில்முனைவோர் இந்த கண்காட்சியில் சலுகை வட்டி விகிதத்தில் கடன்களைப் பெற முடியும்.

சலுகை வட்டி விகிதத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ. ஒரு லட்சம் முதல் 75 கோடி ரூபாய் வரை கடன்களைப் பெற முடியும் என்றும் , மேலும் அத்தகைய வாய்ப்பை எதிர்பார்க்கும் யாழ்ப்பாணத்தின் படித்த இளம் வருங்கால தொழில்முனைவோர் இந்த திட்டத்திலிருந்து பலன்களைப் பெற முடியும்.

இந்த கண்காட்சியின் 4 நாட்களில் சிறப்பு நடமாடும் சேவையும் நடைபெறும். , வணிகத் துறையில் நுழைய எதிர்பார்ப்பவர்கள் திட்டக் கடன்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த கண்காட்சி இடம்பெறும் இடத்தில அரசு மற்றும் தனியார் வணிக வங்கிகள் மற்றும் அரசு ஆலோசனை சேவை நிறுவனங்கள் போன்றவற்றின் 11 சிறப்பு கவுண்டர்களில், சுய வேலைவாய்ப்பு முதல் சிறு மற்றும் நடுத்தர அளவிலான திட்டங்கள் வரை வணிக முயற்சிகளைத் தொடங்க சலுகைக் கடன்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள், அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பெறலாம்.

இந்த கண்காட்சிக்கு வருபவர்களுக்கு பல்வேறு பொருட்களை நியாயமான விலையில் வாங்கவும் வாய்ப்பு வழங்கப்படும். முதலீட்டு வாரியத்தின் (BOI) கீழ் வரும் தொழிற்சாலைகளால் தயாரிக்கப்படும் ஆடைகள் மற்றும் பிற வகை ஆடைகளை இந்த கண்காட்சி மையத்தில் வரி விலக்கப்பட்ட விலையில் வாங்கலாம்.

தொலைக்காட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் மற்றும் நேரடி ஒளிபரப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் எவ்வாறு ஒளிபரப்பப்படுகின்றன என்பதையும், நிகழ்ச்சிகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதையும், செய்தி அறைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் மாணவர்கழும் பொதுமக்களும் பார்த்து அறிந்து கொள்ளமுடியும் என்றும் தெரியவருகின்றது

அதே நேரத்தில், கண்காட்சிக்கு வருபவர்கள் சுகாதார சேவையும் மாகாண சுகாதார சேவைகள் துறையும் இணைந்து வழங்கும் இலவச ஆய்வக மற்றும் மருத்துவ சேவைகளை பெறலாம்
மேலும் வெளிநாட்டு தூதரக சேவைகளில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி சேவைகள் தொடர்பான தகவல்களும் , தென்னிந்திய இசை கலைஞ்ஞர்களின் கச்சேரியும் இடம்பெறும் என்று தெரியவருகின்றது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்