பிரதமர் , அமைச்சர் சஜித் மற்றும் கரு ஜெயசூரிய மும்முனை சந்திப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாசா மற்றும் சபாநாயகர் கரு ஜெயசூரியா ஆகியோர் இன்று மாலை 6.00 மணிக்கு அலரிமாளிகையில் சந்தித்து பேச இருக்கிறார்கள்
இந்த மூன்று தலைவர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இறுதி முடிவு எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமருக்கும் அமைச்சர் பிரேமதாசாவுக்கும் இடையே சந்திப்பொன்று ஒழுங்குபடுத்த பட்டபோதிலும் , அமைச்சர் சஜித் பிரேமதாசாவுக்கு ஏற்பட்ட நேரமின்மை காரணமாக அந்த சந்திப்பு இன்றைய தினத்துக்கு பிற்போட பட்டமை குறிப்பிடத்தக்கது.