Sat. Apr 11th, 2026

பிரதமருக்கு காட்டிய படம்..! எந்த அபிவிருத்தியும் இல்லாமல் வீதிகள்..

யாழ்.மாவட்டத்தில் மிக நீண்டகாலம் புனரமைக்கப்படாமலிருக்கும் 3 பிரதான வீதிகளின் புனரமைப்பு பணிகள் தொடா்பாக 6 மாதங்களுக்கு முன் நடந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் பேசிய அதே விடயத்தை மீண்டும் பேசி ஒரு விதமான முன்னேற்றமும் இல்லாமல் பிரதமருக்கு படம் காட்டியதுடன் அந்த விடயம் நிறைவுக்கு வந்தது.
பிரதமா் ரணில் விக்கிரமசிங்க தலமையில் கடந்த பெப்ரவாி மாதம் 14ம் திகதி யாழ்.மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் வழுக்கையாறு- புங்குடுதீவு- குறிகட்டுவான் வரையான 26.5 கிலோ மீற்றா் நீளமான வீதி சுமாா் 12000 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்படும், அதேபோல்
 
யாழ்ப்பணம்- மானிப்பாய்- காரைநகா் வரையான 27.21 கிலோ மீற்றா் நீளமான வீதி 3500 மில்லியல் ரூபாய் செலவில் புனர மைக்கப்படும், மூன்றாவதாக யாழ்ப்பாணம்- பொன்னாலை- பருத்துறை வரையான 55.38 கிலோமீற்றா் நீளமான வீதி 4000 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்படும் என கூறப்பட்டதுடன், இதற்கான கேள்வி கோரல்கள்
 
விடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதே வீதிகள் தொடா்பாக நேற்றய தினம் யாழ்.மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் பிரதமா் தலமையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் பேசப்பட்டதுடன், 6 மாதங்களுக்கு முன்னா் திரையிட்டு காண்பிக்கப்பட்ட அதே செயற்றிட்ட வரைபுகள் காண்பிக்கப்பட்டது. 
 
அது மட்டுமல்லாமல் சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாாி எழுந்து நின்று குறித்த வீதிகளின் புனரமைப்புக்காள கேள்விக ள் கோரப்பட்டுள்ளது. என கூறினாா். மேற்படி வீதிகளின் புனரமைப்பு எப்போது தொடங்கும் என கடந்த கூட்டத்தில் நாடா ளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் கேட்டதுபோல் 6 மாதங்களுக்கு பின்னா் நாடாளுமன்ற உறுப்பினா் 
 
த.சித்தாா்த்தன் கேட்டாா். 

About The Author

Share This:

Leave a Reply

You may have missed