Thu. Oct 3rd, 2024

பிரதமரின் நிகழ்வுக்கு சேராத கூட்டம்!! -அவசரமாக ஏற்றப்பட்ட கதிரைகள்-

யாழில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்ட பிரமாண்டமான நிழக்வுக்கு எதிர்பார்த்த அளவு பொது மக்கள் வருகைதராத காரணத்தினால் நிகழ்வில் போடப்பட்டிருந்த ஒரு தொகுதி கதிரைகள் அங்கிருந்து அவசர அவசரமாக ஏற்றிச் செல்லப்பட்டது.

 

நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்.நகர மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு யாழ்.மாநகர சபையினால் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கலந்த கொண்டு மண்டப கட்டடத்திற்கான அடிக்கல்லினை நாட்ட வருகைதரும் நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மனத்தினை குளிர வைப்பதற்காக அங்கு அமைக்கப்பட்ட கொட்டகை பச்சை நிறத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் பிரதமரின் வருகை தரும் தருணம்வரைக்கும் எதிர்பார்த்தளவு மக்கள் அங்கு வருகைதராதவில்லை. இதனால் அரச உத்தியோகஸ்தர்களுடன் சேர்த்து அங்கு வந்த பொது மக்களும் அமர்த்தப்பட்டனர்.

இருப்பினும் அங்கு அமைக்கப்பட்டிருந்த கொட்டகை முழுவதும் போடப்பட்டிருந்த நிரப்பும் அளவிற்கு எதிர்பார்த்த கூட்டம் வந்து சேரவில்லை.

இதனால் சுதாகரித்துக் கொண்ட அதிகாரிகள் பிரமர் நிகழ்வுக்கு வரவிருந்த சில விநாடிகளுக்கு முன்னர் அங்கு போடப்பட்டிருந்த ஒரு தொகுதி கதிரைகளை வாகனங்களில் அவசர அவசரமாக ஏற்றிஅ ங்கிருந்து அனுப்பிவைத்திருந்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்