Mon. Dec 9th, 2024

பிரகீத் எக்னெலிகொட வழக்கில் நிறைய சாட்சியங்கள் இருந்தும் குற்றவாளி ஒத்துழைக்கவில்லை – சிஐடி

பிரகீத் எக்னெலிகொட வழக்கில் குற்றவாளிக்கு எதிராக நிறைய சாட்சியங்கள் இருந்தபோதிலும் குற்றவாளி தொடர்ந்தும் ஒத்துழைக்காமல் இருந்து வருவதாக அதன் இயக்குனர் SSP ஷானி அபேயசேகர நேற்றையதினம் குறிப்பிட்டார். வழக்கின் இறுதி அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளுக்கு இதில் எந்தவித தொடர்புகளும் இருப்பதாக தெரியவில்லை. இந்த கடத்தலின் பின் யார் உள்ளார்கள் என்பது தொடர்பாக சிஐடி விசாரணைகள் எதனையும் செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
பிரகீத் எக்னெலிகொட காணாமல் போவதற்கு முதல் ஜனவரி 26, 2010 இல் அக்கரைப்பற்றில் இருந்துள்ளார். இந்த வழக்கின் குற்றம் சுமத்தப்பட்ட லெப். கேர்ணல் ஷம்மி குமாரரத்னவும் அதே தினத்தில் அக்கரைப்பற்றில் இருந்ததற்கான ஆதாரங்கள் தொலைத்தொடர்பு வலையமைப்பு தகவல் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது என்றும் அவர் கூறினார்.

சட்டமா அதிபருக்கு இறுதி அறிக்கையை சிஐடி அனுப்பி வைத்துள்ளது . இதில் இராணுவ புலனாய்வு துறையில் இருந்த 12 பேர் குற்றவாளியாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்