பிக் பாஸ் இல் சிங்களம் பேசும் லொஸ்லியா, சிங்களம் பேசுவதை பெருமை என்று நினைக்கிறாரா ?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து சென்ற தர்சன் மற்றும் லொஸ்லியா, ஈழத்திற்கு பெருமை சேர்ப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் ஆரம்பத்தில் இருந்தது. தமிழ் நாட்டில் இருந்து பங்குபற்றவர்களுடன் ஒப்பிடும்பொழுது இவர்கள் கவர்ச்சியாகவும் அழகாகவும் இருப்பதுடன் திறமையாகவும் இருக்கிறார்கள் என்பது நிஜம். இதில் தர்சன் எந்த குறையும் வைக்காமல் பெருமை சேர்க்கும் வகையில் நேர்மையாகவும் திறமையாகவும் செயற்பட்டுவருகிறார்.
ஆனால் ஆரம்பத்தில் சிறப்பாக செயல்பட்ட லொஸ்லியா , கவினை விழுந்து விழுந்து காதலித்ததன் மூலமும், சேரனின் தந்தை பாசத்தை கொச்சைப்படுத்தும் வகையில் செயல்பட்டதாலும் அவரின் செல்வாக்கு சரிவதுடன், ஈழ ரசிகர்களும் தலையிலடித்து கொள்ளுமளவுக்கு சிலநேரம் நடந்து வருகின்றார்.
இந்த நிலையில் தான் சக போட்டியாளரான தற்போது வனிதாவையும் இதற்கு முன்னர் கஸ்தூரியையும் ‘அக்கி ” ”அக்கி” என சிங்களத்தில் அழைத்து வருகின்றார்.
தமிழ்நாட்டில் உள்ளவர்கள் இதை யாழ்பாணத்து மொழிவழக்காக நினைத்து வருகையில், உண்மையில் அவர் சிங்களத்தில் அக்காவை அக்கி என்று அழைப்பதையே அவரும் பயன்படுத்தி வருகின்றார்.
தமிழை தவிர வேறு எந்த மொழிகளையும் அதிகம் பவிக்கக்கூடாது என்று இருக்கையில், இவரோ 10 படி மேலேபோய் சிங்களத்தில் ”அக்கி” என்று பேசித்திரிக்கிறார்.
இதை இவர் பெருமையாக நினைத்து பேசிவரிக்கிறார் என்று தான் எண்ண தோன்றுகிறது. இதை கண்டிப்பாரா கமல்? தூக்கி எறிவர்களா ரசிகர்கள்?