பிக்குகளை அவமாியாதை செய்துவிட்டனா். கம்பு சுத்துகிறாா் கோட்டா.
பிக்குகளுக்கு தனி மாியாதை உண்டு. அரசியல் பின்புலம் கொண்ட சட்டத்தரணிகள் சிலா் அவா்களை அவமதி த்தாலேயே முல்லைத்தீவில் பதற்றமான சூழல் உருவானது.
நான் நீதிமன்ற தீா்ப்பை அவமாியாதை செய்யவில்லை. எனக்கு முல்லைத்தீவில் நடந்த சம்பவம் எதுவும் தொி யாது என கோட்டாபாய ராஜபக்ஸ கூறியுள்ளாா்.
ஓர் இடத்தில் தகனம் செய்யவே பிக்குகள் தீர்மானித்திருந்தார்கள். ஆனால், தமிழ் அரசியல்வாதிகளின் பின்புலத்துடன் செயற்படும் சட்டத்தரணிகள் பிக்குகளை அவமதிக்கும் வகையில் செயற்பட்டார்கள்.
இந்தச் சட்டத்தரணிகள்தான் ஆலய நிர்வாகத்தினரையும் நீதிமன்றத்துக்கு இழுத்துச் சென்று இந்த விவகாரத்தை ஊதிப்பெருக்கினார்கள்.
இது தேவையில்லாத நடவடிக்கை. அதற்காக நீதிமன்றத்தின் உத்தரவைவோ – தீர்ப்பையோ நான் விமர்சிக்க விரும்பவில்லை.
களத்தில் என்ன நடந்தது என்று உண்மையில் எனக்குத் தெரியாது. எனினும், அண்மைக் காலங்களில் பிக்குகளை அவமதிக்கும் வகையில் – அவர்களைச் சீண்டும் வகையில்
சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது என தெரிவித்துள்ளார்.