பிகில் 3 ஆவது பாடலும் பாடல் இணையத்தில் வைரல்
இளைய தளபதி விஜய் நடிக்கும் பிகில் படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். விஜய் இத் திரைப்படத்தில் பெண்கள் அணியின் கால்பந்தாட்ட பயிற்றுநராக நடிக்க நயன்தாரா அவருக்கு நாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், விவேக், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு, இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..
அட்லீ இயக்கம் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதுவரை படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்பொழுது 3 ஆவது பாடலின் லிரிக்ஸ் இணையத்தில் வெளியிடப்பட்டு சக்கைபோடு போடுகிறது. விஜய் ரசிகர்களுக்கு இன்று பெரிய கொண்டாட்டமாக உள்ளது