பால்மாவின் விலை 15 ரூபாவால் அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதற்கு நுகர்வோர் அதிகார சபை அனுமதியளித்துள்ளது.
இதன்படி ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 15 ரூபாயினாலும், 400 கிராம் பால்மாவின் விலை 5 ரூபாயினாலும் அதிகரிப்பதற்கு நுகர்வோர் அதிகார சபை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்படி நேற்று நள்ளிரவு முதல் இது அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.