Tue. Sep 8th, 2026

பாரிய தேடுதலின் பின் உக்கிய பையுடன் ஏமாற்றமாக திரும்பிய பொலிஸார்

வட்டக்கச்சியில் இன்று இடம்பெற்ற பாரிய தேடுதல் நடவடிக்கையில் எதுவித பொருட்களும் கிடைக்காத நிலையில் , தேடுதல் நடவடிக்கை நிறுத்தப்பட்டது .
பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் வீட்டுக்கு அண்மையில் உள்ள அவரின் சகோதரியின் காணியிலேயே இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கிளிநொச்சி நீதிமன்றில் அனுமதியை பெற்றுக்கொண்டு பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினருடன் பெருமெடுப்புடன் பெருத்த

எதிர்பார்ப்புடன் மேற்கொள்ளப்பட இந்த சோதனை நடவடிக்கை

மேற்கொள்ளப்பட்து. பேக்கோ இயந்திரத்தின் உதவியுடன் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் , சோதனையின் முடிவில் கிழிந்து உக்கிப்போன யூரியா பை ஒன்றையே அவர்களால் மீட்கமுடிந்தது. இதனால் தோண்டிய கிடங்குகளை மூடிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர்.

இன்று காலையில் வெளிவந்த செய்தியில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வீட்டிலேயே சோதனை இடம்பெறுவதாக தகவல்கள் வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது

About The Author

Share This:

Leave a Reply

You may have missed