பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க ஜனாதிபதி சம்மதம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க ஜனாதிபதி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்காக எதிர்வரும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்துக்கு தெரிவுக்குழு உறுப்பினர்களை வந்தால் தான் சாட்சியமளிக்க தயார் என ஜனாதிபதி தெரிவிக்குழுவிடம் தெரியப்படுத்தியுள்ளார் என தெரிவுக்குழு தலைவர் பிரதி சபாநாயகர் ஆனத குமாரசிறி தெரிவித்தார். இதனை ஜனாதிபதி எழுத்து மூலம் அறிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே பிரதமர் ரணில் உட்பட பல அமைச்சர்கள் மற்றும் இராணுவ ,போலீஸ் அதிகாரிகள் இந்த தெரிவுக்குழுவின் முன் விசாரணைக்கு தோன்றி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்த போதிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரிக்கும் பாரளுமன்ற தெரிவிக்குழுவை கடுமையாக விமர்சித்திருந்த ஜனாதிபதி , இந்த தெரிவுக்குழுமுன்னர் தான் விசாரணைக்கு செல்லமாட்டேன் என்று குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.