Sat. Apr 11th, 2026

பாரதி கிண்ணம் கட்டைக்காடு சென் மேரிஸ் வசம்

வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன்  உடுத்துறை பாரதி விளையாட்டு கழகத்தினர் நடாத்திய கால்பந்தாட்ட தொடரில் கட்டைக்காடு சென் மேரிஸ் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகம் நடாத்திய கால்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் இன்று திங்கட்கிழமை குறித்த கழக மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் கட்டைக்காடு சென் மேரிஸ் அணியை எதிர்த்து வெற்றிலைக்கேணி செபஸ்டியன் அணி மோதியது.
ஆட்டம் ஆரம்பம் முதல் இறுதி வரை இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
இதனால் ஆட்ட நேரம் நிறைவடையும் வரை இரு அணிகளாலும் கோல் எதனையும் பெற முடியவில்லை.
இதனால் சமநிலை தவிர்ப்பு உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் கட்டைக்காடு சென் மேரிஸ் அணி 4:3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்
பாரதி விளையாட்டுக்கழக தலைவர் இ.சிந்துயன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  பிரதம விருந்தினராக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ், கௌரவ விருந்தினராக மருதங்கேணி பதில் பொலிஸ் அதிகாரி அத்துக்கல கலந்து சிறப்பித்தனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed