Fri. Jan 17th, 2025

பாம்பு தீண்டியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் 

பாம்பு தீண்டியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

வடமராட்சி நெல்லியடி பகுதியைச் சேர்ந்த ஓய்வு நிலை சிறிலங்கா ரெலிங்கொம் உத்தியோகத்தர் இளையதம்பி சிவகுமார் (வயது 66) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை உடுப்பிட்டி பகுதியில் உள்ள தோட்டத்தில் தனது மாட்டினை மேய்ச்சலுக்காக கட்டிய போது பாம்பு தீண்டியது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று திங்கட்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்