Thu. May 21st, 2026

பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கு அமைய உதயமாகும் புதிய பொலிஸ் பிரிவு!!

குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பில் தகவல்களை பெறுவதற்கு விசேட பொலிஸ் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் பணிப்புரைக்கு அமைய இந்த விசேட பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 24 மணித்தியால சேவைக்குரிய தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

011 2580518 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல்களை வழங்க முடியும். அல்லது 011 2588499 என்ற தொலைநகல் இலக்கத்தினூடாக தகவல்களை வழங்க முடியும்.

அத்துடன், commadantstf@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியூடாகவும் குற்றச் செயல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் தகவல் வழங்கும் நபர்கள் குறித்து இரகசிய தன்மை பேணப்படும் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed