Tue. Sep 8th, 2026

பாண்ட் வாத்திய போட்டியில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி சாதனை

வடமராட்சி கல்வி வலய ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான பாண்ட் வாத்திய போட்டியில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி முதலாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

வடமராட்சி கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான வலய மட்ட பாண்ட் வாத்திய போட்டி நேற்று வெள்ளிக்கிழமை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி முதலாம் இடத்தையும், பருத்தித்துறை வட இந்து ஆரம்பப் பாடசாலை இரண்டாம் இடத்தையும், கரணவாய் தாமோதரா வித்தியாலயம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed