பாணின் விலை 2 ரூபாவாலும் , மாவின் விலை 5.50 ரூபாவாலும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு
இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஒரு இறாத்தல் பாணின் விலையை ரூ .2.00 ஆல் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
இது கோதுமை மாவின் விலையை ப்ரிமா நிறுவனம் அதிகரித்ததாலேயே இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் தெரிவித்தார்கள்.
ஏற்கனவே பிரிமா நிறுவனம் 1 கிலோ கோதுமைமாவின் விலையை 5.50 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது
இருப்பினும், நுகர்வோர் விவகார ஆணையம் கோதுமை மாவு விலையை அதன் அனுமதியின்றி உயர்த்துவதற்கான பிரிமாவின் நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வலியுறுத்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது