பாணின் விலையில் அதிகரிப்பு இல்லை, விலை அதிகரிப்பு திரும்பபெறப்பட்டது
ஒரு றாத்தல் பாணின் விலை முன்பு அறிவித்தபடி ரூ. 2 ஆல் அதிகரிக்கப்படவில்லை என்று பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது .
கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்தார்.
கோதுமை மாவின் விலையை ப்ரிமா சிலோன் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் அதிரிக்க இருப்பதாக வெள்ளிக்கிழமை (06) அறிவித்ததை தொடர்ந்து , பனின் விலையை ரூ .2.00 ஆல் அதிகரிப்பதாக சங்கம் அறிவித்தது இருந்தது
1 கிலோ கோதுமை மாவின் விலை ரூ .5.50 ஆக உயர்த்தப்பட்டது, இருப்பினும் கோதுமை மாவு நிறுவனங்கள் பின்னர் விலை உயர்வை திரும்பப் பெற்றன. இந்த நிலையிலேயே இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்