Sat. Apr 20th, 2024

பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்

வடமாகாண 18, 19 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கான கோவிட்-19 தடுப்பு மருந்தேற்றல் திட்டம் இன்று   வியாழக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது.
கோவிட்-19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் 18, 19 வயதுடைய அனைவருக்கும் பைஸர்  கோவிட்-19 தடுப்பூசியானது நாடளாவியரீதியில் நேற்று  வியாழக்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் இத்தடுப்பூசியானது நேற்று முதல் ஆரம்பமாகவுள்ளது.
கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கு இரண்டாவது தடவையாக தோற்ற இருக்கின்ற மாணவர்களுக்கும் அந்தந்த சுகாதார பிரிவில் உள்ள பாடசாலைகளில் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
மேலும் பாடசாலையைவிட்டு விலகிய 18,19 வயதுப் பிரிவினருக்கு நாளை சனிக்கிழமை அந்தந்த சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலும் தடுப்பூசி வழங்கள்படவுள்ளது.
இவ்வாறு 18, 19 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி வழங்கலானது முடிவுக்குவரும் நிலையில் அதனைத் தொடர்ந்து 17, 16, 15 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்