பாடசாலை நேரங்களில் தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புகள், பரீட்சைகள் நடாத்த தடை

பாடசாலை நேரங்களில் பாடசாலை மாணவர்களுக்கு தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புக்களை நடாத்துதல், பரீட்சைகளை நடாத்துதல் தடை செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி பணிப்பாளர் தி.ஜோண்குயின்ரஸ் அறிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் பாடசாலை நேரத்தில் தனியார் கல்வி நிலையத்தால் பாடசாலை உயர்தர மாணவர்களுக்கு இணைந்த கணிதம் பாட பரீட்சை நடைபெற்றுள்ளது. இதனால் பாடசாலைகளுக்கு பல மாணவர்கள் செல்லாமல் பரீட்சைக்கு சென்றுள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக பாடசாலை ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளதுடன், பெற்றோர்களும் விசனமடைந்து மாகாண கல்வி பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இதனால் பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்வதை அனைவரும் உறுதிப்படுத்துதல் வேண்டும். மாறாக பாடசாலை நேரத்தில் தனியார் கல்வி நிலையங்கள் பாடசாலை வகுப்புகளையோ அல்லது பரீட்சைகளையோ நடாத்துவது தெரியவருகின்ற போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.