Sat. Feb 15th, 2025

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் ஆரோக்கியமான உணவுகளை விற்பனை செய்வதற்கு அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் – உடற்கல்வி டிப்ளமோ ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன்

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் பொதி செய்யப்பட்ட உணவு வகைகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை விற்பனை செய்து மாணவர் சமுதாயத்தை ஆரோக்கியமானதாக ஆக்கிக் கொள்ள பல தரப்பினரும் முன்வர வேண்டும் என உடற்கல்வி டிப்ளமோ ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அவர்களுடன் மாணவர்கள் போசாக்கு மற்றும் சுகாதாரம் தொடர்பாக எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி உடற்கல்வி டிப்ளமோ ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் இன்று வியாழக்கிழமை கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இதன் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
பாடசாலைகளில் இயங்கும் சிற்றுண்டிசாலைகளில் திடீர் உணவுகள், எண்ணெய் நிறைந்த உணவுகள், பேக்கரி உற்பத்தி உணவுகள் மற்றும் சோடா வகைகளை விற்பனை செய்யக் கூடாது என கல்வி அமைச்சினால் சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் பல சிற்றுண்டிச்சாலைகளை குத்தகைக்கு எடுக்கும் குத்தகைக்காரர்கள் ஆரோக்கியமான உணவுகளை மாணவர்களுக்கு விற்பனை செய்யாது தமது இலாப நோக்கத்தைக் கருத்தில் கொண்டு ஆரோக்கியமற்ற உணவுகளையே விற்பனை செய்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் கல்வி மற்றும் இணைபாட விதானங்களில் தமது திறமைகளை வெளிப்படுத்த தவறுவதும் ஒரு காரணமாக அமைகிறது.
எனவே மாணவர்களின் நலத்தை கருத்தில் கொண்டு மிக்சர் போன்ற பொதி செய்யப்பட்ட உணவுகள் மற்றும் சோடா வகைகளை பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட வேண்டும். இதற்கு அதிபர், பெற்றோர் மற்றும் அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்