பாடசாலையில் முடி பிரச்சனை – தாய் கண்டிப்பு – தரம் 10 மாணவன் உயிரிழப்பு

பாடசாலையில் மாணவனின் முடியை வெட்டுமாறு கூறியதையடுத்து தாயாரினால் முடி வெட்டப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாணவனின் கழுத்தில் சுருக்கிட்டு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் மொனராகலையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
கடந்த புதன்கிழமை வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹந்தபானகல பகுதியில் குறித்த மாணவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
15 வயதான எதிரிமன்னகே கவீஷ லக்மால் என்ற மாணவனே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
குறித்த மாணவன் அதே பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் தரம் 10ல் கல்வி கற்று வருகின்றார்.
உரிய முறையில் முடி வெட்டிய பின்னர் மாணவனை பாடசாலைக்கு அனுப்புமாறு தாயாரிடம், பாடசாலை ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதற்கமைய, தாயார் தலைமுடியை வெட்டியதால் ஆத்திரமடைந்த மாணவன் தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை வெல்லவாய ஆதார மருத்துவமனையில் நடைபெறவுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவனின் தந்தை சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது