Thu. Apr 24th, 2025

பாடசாலைத் தரிசிப்புக்குச் செல்லும் கல்வி அதிகாரிகள், தங்கள் எல்லைகளைப் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன்

பாடசாலைத் தரிசிப்புக்குச் செல்லும் கல்வி அதிகாரிகள், தங்கள் எல்லைகளைப் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஊடக அறிகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
கல்வி அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் கரிசனை கொள்வதற்கான பாடசாலை தரிசிப்புக்கள் என்ற பெயரில், அதிபர், ஆசிரியர்களின் உரிமைகளை மழுங்கடிக்க செய்யும் விதமான- அரசாங்கத்தரப்பின் எலும்புத் துண்டுகளை அதிபர், ஆசிரியர்களுக்கு வீசும் செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
நேற்றைய தினம் (18.07.2024) வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட தேசிய பாடசாலையொன்றுக்கு –  தரிசிப்பு என்ற பெயரில் சென்றிருந்த, கல்வியமைச்சின் அதிகாரியான திரு. பிரணவதாசன் உள்ளிட்ட குழுவினர்- அதிபர், ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டங்களுக்கு எதிரான கருத்துக்களை விதைத்ததுடன்,  போராட்டத்தில் கலந்துகொள்ளாது விட்டிருந்தால் சம்பள அதிகரிப்பு கிடைத்திருக்கும் என்று அதிபர், ஆசிரியர்களுக்கு தெரிவித்து, ரணில் – ராஜபக்ஸ அரசாங்கத்தின் எலும்புத் துண்டுகளை வீசும் முகவர்களாக செயற்படுவதற்காக வடக்கு மாகாணத்துக்கு வந்துள்ளமை தெளிவாகிறது.
கல்வியமைச்சின் அதிகாரிகள் என்ற போர்வையில், ரணில் – ராஜபக்ஸ அரசாங்கத்தின் எலும்புத் துண்டுகளை வீசுவதற்காக வடக்குக்கு வந்திருக்கும் திரு.பிரணவதாசன் உள்ளிட்ட குழுவினர் – அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் கல்வியமைச்சின் அதிகாரியாக இருந்த சுபோதினி தலைமையிலான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை வாசித்து அறிந்து கொள்வது முக்கியமானதாகும்.  அதிபர் , ஆசிரியர்களின் கிடைக்க வேண்டிய சம்பளத்தை வழங்காமல், பல தசாப்தங்களாக  திருடிக் கொண்டிருக்கும் அரசாங்கங்களின் எடுபிடிகளாக பிரசாரம் செய்வதை நிறுத்துமாறும், கல்வி விடயங்களில் அக்கறை செலுத்துமாறும் திரு.பிரணவதாசன் போன்றோரைக் கேட்டுக்கொள்கிறோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்