பாடசாலைகளுக்கான 2020 ஆம் ஆண்டுக்கான புதிய அறிவித்தலை விடுத்த ஆளுநர்
வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் எக்காரணம் கொண்டும் 35 மாணவர்களுக்கு மேல் இணைத்துக் கொள்ளக்கூடாது எனவும் மாணவர்களுக்கான அனுமதியினை கல்வியமைச்சின் சுற்றுநிருபத்துக்கு அமைவாக மேற்கொள்ளவேண்டும் என்றும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணிப்புரை விடுத்துள்ளார்.
2020ஆம் ஆண்டில் பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வேலைப்பாடுகள் பாடசாலைகளினால் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த அறிவித்தல் ஆளுநரால் விடுவிக்கப்படுள்ளது
கடந்த வருடங்களில் பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் போது வகுப்பு பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டதுடன் , அனுமதியின்றி மேலதிக பிரிவுகளும் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வருடம் பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் போது மாகாண கல்வி அமைச்சினால் அனுமதிக்கப்பட்ட வகுப்பு பிரிவுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டவேண்டும் என்றும் ஒவ்வொரு வகுப்பு பிரிவிலும் 35 மாணவர்களுக்கு மேல் இணைத்துக் கொள்ளக்கூடாது என்றும் ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்