Sun. Apr 12th, 2026

பாகிஸ்தானில் கோர விபத்து – 25 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாணத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

கைபர் பக்துன்வா மாகாணத்திலிருந்து பாக்ரா என்ற பகுதி நோக்கி நேற்று இரவு (வெள்ளிக்கிழமை) பயணித்த பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது .

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மீட்புக் குழுவினர் இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

விபத்து இடம்பெற காரணம்,வேகக்கட்டுப்பாட்டை இழந்தமை என அறியப்படுகிறது

விபத்து இடம்பெற்ற பகுதியில் தொடர்ச்சியாக மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed