Sun. Oct 6th, 2024

பஹாமாஸ் மற்றும் அமெரிக்காவை தாக்கும் டோரியான் சூறாவளி

பஹாமாஸில் டோரியன் சூறாவளியினால்(ஹரிகேன் ) இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாக அந்த நாட்டின் அரசாங்கம் அறிவித்துள்ளது .

உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 23 ஆக உள்ளபோதிலும் , இதன் எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீவுக்கூட்டத்தின் மிக மோசமான பகுதியான அபாக்கோ தீவுகளுக்கு அதிகாரிகள் 200 இறந்த உடல்களை பொதி செய்வதற்கு பைகளை அனுப்பி இருக்கிறார்கள் .
அபாகோஸ் மற்றும் கிராண்ட் பஹாமாவில் ஆயிரக்கணக்கானவர்களை இன்னும் காணவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

டோரியன் சூறாவளியானது – ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை வடக்கு பஹாமாஸை பேரழிவிற்கு உட்படுத்தியது – இப்போது அமெரிக்காவின் தெற்கு மற்றும் வட கரோலினா கடற்கரைகளை தாக்கிக்கொண்டிருக்கிறது , ஆனால் இது பலவீனமடைந்து கொண்டுவருவதால் அமெரிக்காவில் அதன் தாக்கம் குறைவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்