பழுதடைந்த கெளபியை விற்ற நெல்லியடி வர்த்தகருக்கு அபராதம்
வண்டு தின்று பழுதடைந்த கெளபியை விற்ற வர்த்தகருக்கு 5ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
கரவெட்டி சுகாதார பணிமனைக்குட்பட்ட நெல்லியடி பொதுச் சுகாதார பிரிவினரால் வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது நெல்லியடி வர்த்தக நிலையம் ஒன்றில் வண்டு தின்று பழுதடைந்த கெளபியை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யபட்டது. பருத்தித்துறை நீதிமன்றத்தால் குறித்த வர்த்தகருக்கு 5 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.