பளை விபத்தில் இளைஞன் பலி, இருவர் படுகாயம்
![](https://newsthamil.com/wp-content/uploads/2023/11/FB_IMG_1701301990402.jpg)
அதிவேகமாக மோட்டார் சைக்கிள் செலுத்திய இளைஞர்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
![](https://newsthamil.com/wp-content/uploads/2023/11/FB_IMG_1701301976960-152x300.jpg)
![](https://newsthamil.com/wp-content/uploads/2023/11/FB_IMG_1701301982547-135x300.jpg)
பளை நகர பகுதியிலிருந்து புலோப்பளை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் புலோப்பளையில் இருந்து பளை நகரப்பகுதியை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. இச்சம்பவத்தில் பளை நகரம் பளையை சேர்ந்த 20 வயதான குணம் கணேசன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இருவர் பளை வைத்தியசாலை கொண்டு சென்று மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.