பளை வைத்திய அதிகாரியிடமிருந்து வெடி பொருட்கள் மீட்பு விசாரணை தொடர்கிறது
கிளிநொச்சி- பளை பிரதேச வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் நடாத்திய விசாரணையில் பெருமளவான வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் அவர் தொடர்பான விசாரணைகள் முடிவடையவில்லை. மேலும் தொடரவுள்ளதாக பொலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்பு கொண்டவர் என்ற வகையில் சந்தேகத்தில் கடந்த 19ம் திகதி கைதாகியுள்ள கிளிநொச்சி பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபன் என்பவரிடம் நடாத்திய விசாரணையில் மறைத்து வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
ஏ.கே.47 துப்பாக்கி ஒன்றும் அதற்கான மகசீன்கள் இரண்டு, 120 தோட்டாக்கள், மற்றும் 11 கைக்குண்டுகள், B.G. 10ரக வெடி பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பொருள் அனைத்தும் பளை கண்டாவளை பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளது.
இவரிடம் தொடர்ச்சியான விசாரணைகள் மேற்கொள்ள உள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.