பளையிலிருந்து மாத்தறைக்கு கஞ்சா கடத்திய இருவர் கைது
பளையிலிருந்து மாத்தறைக்கு கஞ்சா கடத்துவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வவுனியா புதிய பஸ் நிலையத்தில் வைத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மாத்தறையை சேர்ந்த 21,27 வயதுடைய இருவரே இதன் பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களின் பயண பொதியினை சோதனையிட்ட சமயத்தில் சுமார் 3கிலோ 300 கிராம் எடையுடைய கேரளா கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் இருவரையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளார்கள் .