பளுதூக்கல் மத்தியஸ்த்தர் பரீட்சையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட வடமாகாணத்தில் ஐந்து பேர் சித்தி

தேசிய தரத்திலான பளுதூக்கல் மத்தியஸ்த்தர் பரீட்சையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட வடமாகாணத்தில் ஐந்து பேர் சித்தியடைந்துள்ளனர்.
இவர்களுக்கான பரீட்சை அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.
இதில் யாழ் பளுதூக்கும் கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த

ஆர்.விஜயபாஸ்கர்,

வி.சங்கர், மற்றும்
வி.ஆர்ஷிகா உட்பட

ஏ.விதன்,

செல்வி.எஸ்.நிதர்ஷினி ஆகியோரும் சித்தியடைந்துள்ளனர். ஏற்கனவே டினேஜா என்பவர் மாத்திரம் சித்தியடைந்த நிலையில் இவ்வாண்டு வடமாகாணத்தைச் சேர்ந்த 5 பேர் சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது