பளுதூக்கலில் யாழ் பல்கலைக்கழகற்கு 8 இடங்கள்
இலங்கை பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான பெண்களிற்கான பளுதூக்கல் போட்டியில் யாழ் பல்கலைக் கழகம் மூன்று முதலாம் இடத்தையும் ஐந்து இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.
பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான பளுதூக்கல் போட்டிகள் றுகுணு பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் யாழ் பல்கலைக்கழக அணி சார்பாக 45 கிலோ நிறைப் பிரிவில் எஸ். பிரியங்கா, 59 கிலோ நிறைப் பிரிவில் வி.அன்னலட்சுமி, 76 கிலோ நிறைப் பிரிவில் ஆர்.தசாங்கினி ஆகியோர் முதலாம் இடத்தையும், 71 கிலோ நிறைப் பிரிவில் ஜி.ராஜனா, 76 கிலோ நிறைப் பிரிவில் ஆர்.எம்.பி.எம்.சண்டநாயக்க, 87 கிலோ நிறைப் பிரிவில் ஜெ.கஸ்தூரி, 87கிலோவுக்கு மேற்பட்ட பிரிவில் எம்.பிரிந்தா ஆகியோர் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.