பளுதூக்கலில் பண்டத்தரிப்பு பெண்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள்
இலங்கை பாடசாலை பளுத்தூக்கல் சங்கம் நடாத்திய பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுத்தூக்கல் போட்டியில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவிகள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த போட்டி கடந்த 1ம் திகதி
கேகாலை பிலிமத்தலாவை மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையைப் பிரதிநிதித்துவம் செய்த செல்வி . வி. ஜெஸ்மினா 18 வயதிற்குட்பட்ட 71கிலோ எடைப் பிரிவில் 92 கிலோகிராம் பளுவை தூக்கி தங்கப்பதக்கத்தையும் செல்வி.இ.றம்மியா 20 வயதுக்குட்பட்ட 55 கிலோ எடைப்பரிவில் 65 கிலோகிராம் பளுவைத் தூக்கி வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றுள்ளார்கள்.