பளுதூக்கலில் தேசியத்தில் கல்லூரி சாதனையை பதிவு செய்தது இராமநாதன் கல்லூரி
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் இராமநாதன் கல்லூரி மாணவிகள் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை கைப்பற்றி கல்லூரி சாதனையை தேசியத்தில் பதிவு செய்துள்ளனர்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டி கண்டியில் நடைபெற்றது.
இதில் யா/இராமநாதன் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்து களம் இறங்கிய பிரணதி 17 வயதுப் பிரிவினருக்கான 45 கிலோ எடைப் பிரிவில் 76 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும்,
நீ.மஸ்மிதா 20 வயது பிரிவினருக்கான 71 கிலோ எடைப் பிரிவில் 91 கிலோ பளுவைத் தூக்கி வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
கல்லூரியின் வரலாற்றில் பளுதூக்கலில் தேசியமட்டத்தில் பதக்கத்தை சுவீகரித்தமை இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.