பல தகுதியான வேட்ப்பாளர்கள் உள்ளதே ஐக்கிய தேசிய கட்சியின் பிரச்சினை -கபீர் ஹாசிம்
ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் கபீர் ஹாஷிம் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் பொழுது கூட்டங்களை நடத்துவதிலும், கட்சியின் வேட்பாளராக ஒருவர் தன்னை ஆக்க கோருவதில் எந்தவித தவறும் இல்லை என்றும் கூறினார். , அது ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டது என்பதால். ஜனநாயகத்தை கட்டி காக்கின்ற ஐக்கியதேசிய கட்சியில் இது எந்த விதத்திலும் பிழையான விடயம் யில்லை என்று கூறினார்
.மேலும் குறிப்பிட்ட அவர், பொதுஜன முன்னணி போலல்லாது பல தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் எங்களிடம் உள்ளனர் என்பதால் தான் தற்பொழுது ஜனாதிபதி வேட்பாளரை தெரிவதில் ஐக்கிய தேசிய கட்சியில் பிரச்சினை உள்ளது என்றார்
ஐக்கிய தேசிய கட்சி இந்த விடயத்தை மிகவும் கவனமாகக் கையாண்டு மக்களின் ஆதரவு பெற்ற வேட்பாளரை சரியான நேரத்தில் தெரிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.