பலியானோரின் எண்ணிக்கை 803 ஆக உயர்வு

சீனாவில் மிகப்பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 803 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் சீனாவில் இதுவரையில் 36 ஆயிரத்து 693 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் ஹூபேய் மாகாணத்தில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான இரண்டாயிரத்து 147 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.