Thu. May 1st, 2025

பலாலி விமான நிலையத்தை “யாழ்ப்பாணம் விமான நிலையம்” என அழைப்போம். -பிரதமா்-

பிராந்திய விமான நிலையமான தரம் உயா்த்தப்படும் பலாலி விமான நிலையத்திற்கு யாழ்ப்பாணம் விமான நிலையம் என பெயா் சூட்டவுள்ளதாக பிரதமா் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளாா்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட தி.மு.க கனிமொழி கருணாநிதி உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள்,

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் ஆகியோர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த விசேட சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை காலை அலரிமாளிகையில் இடம்பெற்றது.இதன் போது பலாலி விமான நிலைய அபிவிருத்தி குறித்து பிரதமரால் பேசப்பட்டுள்ளது.

பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும் பலாலி விமான நிலையம் யாழ்ப்பாணம் விமான நிலையமாக பெயரிடப்படும் இங்கிருந்து

அடுத்த மாதம் (ஒக்டோபர்) இந்தியாவின் முக்கிய நான்கு நகரங்களுக்கிடையில் மேற்கொள்ளப்படவுள்ள நேரடி விமான சேவை மற்றும் இதற்காக

இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்த பிரதமர் இதன் போது தெளிவுபடுத்தியுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்