Fri. Mar 21st, 2025

பலாலி விமான நிலையத்திற்கான பிரதான வீதி காப்பெற் வீதியாக மாறுகிறது.

பிராந்திய விமான நிலையமாக தரம் உயா்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் பலாலி விமான நிலையத்திற்கான பாதையை புனரமைப்பு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பலாலி விமான நிலையத்தின் நுழைவாயில் மேற்குப் புறமாக மாற்றப்படுவதால் தெல்லிப்பளை சந்தியில் இருந்து வைத்தியசாலை வீதியூடாக

கட்டுவன் சந்தி -கட்டுவன்- மயிலிட்டி வீதி காப்பெட் வீதியாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது. விமான நிலையத்தின் நுழைவாயில்

மயிலிட்டி வடக்கில் அமைகின்றது. மிகவும் அகலமான நுழைவாயிலாக அமைவதுடன் இங்குள்ள இராணுவ முட்கம்பி வேலியும் அகற்றப்படவுள்ளது.

மேலும் கட்டுவன் மயிலிட்டி வீதியில் கிராமக்கோட்டு சந்திக்கு முன்பாக உள்ள இராணுவ முட்கம்பி வேலி வீதியை அபகரித்து இராணுவத்தினர்

400 மீற்றர் தூரத்துக்கு மக்களின் காணியில் தூண் அமைத்த நிலையில் அதனையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டுவன் மயிலிட்டி வீதி கடந்த ஆண்டு இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்